×

களைகட்டிய மதகடிப்பட்டு வாரச்சந்தை-மாடுகளை வாங்க குவிந்த வியாபாரிகள்

திருபுவனை : புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மதகடிப்பட்டு மாட்டுச்சந்தை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து ஏராளமான விவசாயிகள் மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். மாட்டுச்சந்தை காலை 4 மணிக்கு தொடங்கி 10 மணி வரை நடைபெறும். மாட்டுச் சந்தையில் மாடுகள் மட்டுமின்றி ஆடு, கோழி, முயல், காடை உள்ளிட்டவை விற்கப்படுகின்றன. மாட்டுச்சந்தையில் மாடுகள் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. மாடுகளின் விற்பனையும் மந்தமாகவே காணப்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது, மாடுகளை வைத்து பராமரிக்க முடியவில்லை. அதனால் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மாட்டுச்சந்தை முடிந்தவுடன் காய்கறி, மளிகை பொருட்கள், பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும். தற்போது பலா, மாம்பழ சீசன் என்பதால் பண்ருட்டி பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட பலாப்பழங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள மாம்பழங்களும் அதிகளவில் விற்பனைக்கு குவிக்கப்பட்டு இருந்தன. காய்கறிகளின் விலையும் குறைவாக உள்ளது. சின்ன வெங்காயம் 5 கிலோ 100 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 7 கிலோ 100 ரூபாய்க்கும், தக்காளி 2.5 கிலோ 100 ரூபாய்க்கும், புளி கிலோ 50 ரூபாய், பூண்டு 2.5 கிலோ 100 ரூபாய்க்கும், மேலும் காய்கறிகள் விலை குறைந்தே காணப்பட்டது. சந்தை பகுதியில் காய்கறி விலை குறைவானதால் கூட்டம் அலைமோதியது. மேலும் பலாப்பழம், மாம்பழம் விற்பனையும் விறுவிறுப்பாக நடந்தது. இதனால் அப்பகுதியில் இருந்த டிபன் கடைகள், டீ கடைகளிலும் விறுவிறுப்பாக வியாபாரம் நடைபெற்றது….

The post களைகட்டிய மதகடிப்பட்டு வாரச்சந்தை-மாடுகளை வாங்க குவிந்த வியாபாரிகள் appeared first on Dinakaran.

Tags : Tirupuvanai ,Puducherry-Villupuram National Highway ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து